காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பரதநாட்டிய போட்டிகள்
 
					காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் திருமதி மனோகரி மணியம்மா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பரதநாட்டிய போட்டிகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் திருமதி மனோகரி மணியம்மா அவர்களின் 75வது பிறந்த நாளை ஒட்டி பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பரதநாட்டிய போட்டிகள் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கு பெற்றனர்.
பள்ளியின் தாளாளர் கல்வி காவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக 6000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 4000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 3000 ரூபாயும், மற்றும் பாராட்டு சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவிகளின் நடன அசைவுகள் அனைவரின் கைத்தட்டலை பெற்றது.
 
 
 
 


 
			 
			 
			 
			 
			