காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள் அனுசரிப்பு

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள் அனுசரிப்பு

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள் அனுசரிப்பு

சமர்ப்பண தினமாக மலரஞ்சலி செலுத்தி மரியாதை

காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாஜக மூத்த தலைவரும், அகில இந்திய பொதுச் செயலாளராகப் பணியாற்றியவருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்யாயாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாளை மர்ப்பண தினமாக கடைப்பிடிக்கும் வகையில், பாஜக நிர்வாகிகள் சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது நாட்டுப்பணி மற்றும் கட்சிப் பணிகளை நினைவுகூர்ந்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவராக தீனதயாள் உபாத்யாய விளங்கியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அவரது கொள்கைகள் மற்றும் பொதுப்பணியை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு நிர்வாகி காஞ்சி ஜீவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் கூரம் விஸ்வநாதன், வாஞ்சிநாதன், அதிசயம் குமார், காஞ்சி மேற்கு மண்டல் தலைவர் தனலட்சுமி, தியாகு, யுவராஜ், மதன்ராஜ், செந்தில்குமார், அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நினைவைப் போற்றும் வகையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *