புதுவை பல்கலைகழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் விவகாரம்: புதுச்சேரி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு
புதுவை பல்கலைகழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய காலபட்டு காவல் துறையினரை கண்டித்து, மாநில உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சருமான மாண்புமிகு நமச்சிவாயம் அவர்களை (14/10/2025) புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், புதுவை பல்கலைக்கழக மாணவிகளின்மீதான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் மாதவைய்யா மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு 2015 விதிகள் படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை முறையாக அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்போது, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் RSP தமிழ் மாநில குழு உறுப்பினர் தோழர் பாஸ்கர், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் தோழர் சுவாமிநாதன், புரட்சிகர இளைஞர் முன்னணி – RYF புதுச்சேரி மாநில அமைப்பாளர் தோழர் நவீன் குமார், மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உடன் இருந்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை நிர்வாகிகளையும் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களையும் மாணவர் இளைஞர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் அழைத்து பேசுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

