தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் கேக் தயாரிக்கும் விழா

தூத்துக்குடியில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சைகள், அத்திப்பழம் உள்ளிட்ட உயர்தரமான ஸ்பைசஸ்களை பதப்படுத்தி 350 கிலோ ரிச் ப்ளம் கேக்கை தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக கிறிஸ்மஸ் பண்டிகைக்காக கேக்குகளை அதிக அளவில் வாங்கி நண்பர்கள் உறவினர்கள் பக்கத்து வீட்டுக்காரர் என அனைவருக்கும் பரிசாக அளிப்பர் மேலும் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் கேக்குகள் மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும்.


தூத்துக்குடியில் உள்ள டி எஸ் எப் கிராண்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் வைத்து டி எஸ் எப் குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் டி.அன்பழகன் மற்றும் சந்திரா மனோகரன் ஆகியோர் தலைமையில் கேக் தயாரிக்கும் பணி துவங்கியது.


அதிகமாக பொதுமக்கள் விரும்பி வாங்கும் ரிச் ப்ளம் கேக்குகள் தயார் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக உலர் திராட்சைகள் மற்றும் முந்திரி, பாதாம், வால்நட், செர்ரீ பழம், அத்திப்பழம், லெமன் ரின்ட்ஸ், டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு பியல், ஆப்ரிகாட் என 90 கிலோ ஸ்பைசஸ் மற்றும் பழரசம் தேன் உயர்தர மதுபானங்கள் சேர்க்கப்பட்டு ஊரவைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஹோட்டல் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கேக் தயாரிக்கும் கலைஞர்கள் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பி அணிந்தபடி கிறிஸ்மஸை வரவேற்கும் வகையில் ஹேப்பி கிறிஸ்மஸ் என்று உற்சாக குரல் எழுப்பியபடி கேக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு தயார் செய்யப்படும் ரிச் பிளம் கேக் சுமார் 50 நாட்கள் ஊற வைக்கப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பு சுவையான 350 கிலோ எடை கொண்ட கேக்காக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.


கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சிறப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் வகையில் சத்தான பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரிச்ப்ளம் கேக்குகளை அனைவரும் விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக கேக் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் திருமதி. ஜெயா அன்பழகன், திருமதி. தீபிகா, திருமதி. ரேச்சல், மற்றும் செல்வி கேசியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். செயல் இயக்குனர் திருமதி. எம்.திவ்யா, பொது மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் மேலாளர்கள், பணியாளர்கள் அனைவரும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

