காஞ்சிபுரம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி: பால்குட அபிஷேக விழா
 
					
காஞ்சிபுரம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி ஒட்டி நடைபெற்ற பால்குட அபிஷேக விழாவில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.
காஞ்சிபுரம் வீரன் வீரண்ணன் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் கந்தசஷ்டி கொண்டாடும் விதமாக பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
 
  
  
 
இதனைத் தொடர்ந்து இரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
 
    
 



 
			 
			 
			 
			 
			