காஞ்சிபுரம்: சஷ்டி திருக்கல்யாண உற்சவம்
 
					காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சஷ்டி திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
 அந்த வகையில் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு மாலை மாற்றி மாங்கல்ய தாரணம் சமர்ப்பித்து திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
 அந்த வகையில் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு மாலை மாற்றி மாங்கல்ய தாரணம் சமர்ப்பித்து திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
ஆலய அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ராஜாஜி மார்க்கெட் ராமலிங்கம் குடும்பத்தினர் உபயத்துடன் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில் அறங்காவலர்கள் தசரதன், கடம்பன், ஏகாம்பரம், பாலச்சந்தர் ஆகியோர், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார்கள்.
இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் பேரருளை பெற்று சென்றனர். இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் நிமர்ந்த கார தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு பழனியாண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழாவில் தெய்வயானை திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. இதில் மாலை மாற்றி மாங்கல்யம் சமர்ப்பித்து விழா சிறப்பாக நடைபெற்றது.




இவ்விழா ஏற்பாடுகளை பாபு, ஆறுமுகம் ஆகியோர் 5 தெரு வாசிகளுடன் இணைந்து திருக்கல்யாண உற்சவத்தினை சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


 
			 
			 
			 
			 
			