தமிழ்நாடு மாநில முவய்தாய் தற்காப்பு கலை போட்டி: ராமநாதபுரம் பெண் வீராங்கனை தங்கப்பதக்கம்
 
					ஐந்தாவது தமிழ்நாடு மாநில முவய்தாய் தற்காப்பு கலை போட்டியில் ராமநாதபுரம் வீராங்கனை முதல் பெண் வீராங்கனை ஆக சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியானது சென்னை மதுரவாயல் டைனமிக் வளாகத்தில் யுனைடெட் முவய்தாய் அசோசியேஷன் இந்தியா மற்றும் இன்டர்நேஷனல் முவய்தாய் அங்கீகாரத்தில் நடைபெற்றது.
ஐந்தாவது தமிழ்நாடு முவய்தாய் சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர். இதில் பங்கு பெற்ற ராமநாதபுரம் வீராங்கனை ஹரிஸ்மா 60 கிலோ பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே போல வீரர் முகமது ரஷீத் இப்ராஹிம் 60 கிலோ ஆண்கள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சார்ந்த பல்வேறு பள்ளிகளை சார்ந்த எட்டு வீரர்கள் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றனர்.
இவர்களை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், நேரில் சந்தித்து பரிசு பெற்றவர்களையும் பயிற்சி அளித்த முதன்மை பயிற்றுநர் உமர் முக்தார் உள்ளிட்டவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.


 
			 
			 
			 
			 
			