காஞ்சிபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை
 
					காஞ்சிபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை ஒட்டி முக்குலத்தோர் தேவர் சங்கம் சார்பில் தேவர் புகைப்படத்திற்கு மாலை மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
 தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழா & 63 வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா & 63 வது குருபூஜையை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவ படத்திற்கு, காஞ்சி மாநகர முக்குலத்தோர் தேவர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தலைவர் ராம பாண்டியன் செயலாளர் வன்னிய ராஜ் பொருளாளர் கண்ணன் துணைத் தலைவர் வீரராஜு துணைச் செயலாளர் ஆர் கண்ணன், அதிமுக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம் வட்ட செயலாளர் கர்ணா, டாக்டர் முத்துக்குமரன் எஸ்பி, சீதாரப்பன் மகளிர் அணி நிர்வாகி வரலட்சுமி உள்ளிட்ட மாநகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.