தேசிய தன்னார்வ ரத்ததான விருது 2025

ராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக மருத்துவ சேவை அணி க்கு உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு உதிரம் கிடைக்கும் வகையில் ஜாதி, மதம் பாராமல் தொடர்ச்சியாக இரத்ததான சேவை செய்வதை பாராட்டி (03.11.2025) தேசிய தன்னார்வ ரத்ததான விருது வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கஹ்லான், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி Dr.அமுதாராணி, பாராட்டி விருதினை வழங்கினர்.
இந்நிகழ்வில் தமுமுக மருத்துவ சேவை அணி மண்டல செயலாளர் சுலைமான், தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது தமீம், மாவட்ட துணை செயலாளர் ஜாகீர் பாபு, நகர் தலைவர் தாஜுதீன், மமக நகர் செயலாளர் செய்யது அக்பர் கலந்து கொண்டனர்.

