மேல பூவானி கிராமத்தில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள மேல பூவானி கிராமத்தில் குளத்திற்கு நீர் வரும் ஓடை பாதையை ஆக்கிரமித்து கிரீன் லீப் என்ற தனியார் காற்றாலை நிறுவனங்கள் பாதை அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் 250க்கும் மேற்பட்டோர் ஓடையில் இறங்கி குடியேறி சமைக்கும் போராட்டம்
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கிராம மக்கள் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் அமைந்துள்ளது மேல பூவானி கிராமம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் தேவேந்திர குல வேளாளர் வகுப்பை சேர்ந்தவர்கள் இங்குள்ள குளத்தின் மூலம் சுமார் 600 ஏக்கரில் நெல் பயிர், பாசி, உழுந்து, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் விவசாயமே முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த கிராமத்தின் குளத்திற்கு வரக்கூடிய நீர்வழிப்பாதை ஓடையை ஆக்கிரமித்து கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் இருந்து செயல்பட்டு வரும் Lilac ego energy lavender echo Power private limited கிரீன் லீப் என்ற தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது மழைக்காலம் என்பதால் குளத்திற்கு வரக்கூடிய மழை நீர் ஓடை வழியாக வராமல் பாதிக்கப்பட்டு குளம் நிரம்பாமல் உள்ளது இதன் காரணமாக இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தனியார் நிறுவனத்தை அணுகி ஓடை பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும், ஓடையை பாதிக்காதவாறு குழாய்கள் அமைத்து தங்கள் பணியை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் காற்றாலை நிறுவனம் தாங்கள் அரசு அதிகாரிகளிடம் ஆர்டர் வாங்கி வைத்துள்ளதாகவும் பணியை நிறுத்த மாட்டோம் என கூறியுள்ளனர்.



இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேல பூவாணி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்த ஓடையில் இறங்கி காற்றாலை நிறுவனத்தை கண்டித்தும் இதற்கு நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்கள் விவசாயத்தை பாதிக்கும் காற்றாலை அமைப்பதை தடுத்து காற்றாலை நிறுவனத்தை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு காற்றாலை நிறுவனத்தை அந்த பகுதியில் இருந்து அகற்றாவிட்டால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர் மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க விட்டால் தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் டென்ட் அமைத்து குடியேறி சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேல பூவானி கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

