விடியல் பயணம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு – காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் MLA
விடியல் பயணம், கலைஞர் மகளிர் உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளதாக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக மற்றும் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு ஓரணியில் என்ற கருத்தரங்கம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கட்சி நிர்வாகிகளிடம் சட்டமன்ற தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன வெற்றிவாகை சூடுவதற்கு திமுகவின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வது போன்ற யுக்திகளை எடுத்துரைத்து பேசினார்.
அதன் பின்பு எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் செய்தியாளர்கள் சந்தித்து தெரிவித்தபோது, “தமிழ்நாடு ஓரணியில் என்ற இலக்கில் வெற்றி வாகை சூட உள்ளோம் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு லட்சம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த இலக்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

