ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் கொண்டாட்டம்
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள குபேரா பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் பெர்ஜர் பெயிண்ட்ஸ், தனியார் தொலைக்காட்சி இணைந்து 12.12.2025 அன்று அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை மற்றும் 75 ஆவது பிறந்த தினத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பெயிண்டிங் செய்யும் தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் குறித்த கேள்விகளை எழுப்பி அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பின்பு ராமநாதபுரம் மாவட்ட ரஜினிகாந்த் மன்ற தலைவர் பி ஆர். பாபு தலைமையில் கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இதில் மாவட்ட ரஜினி மன்ற கௌரவத் தலைவர் கபிலர், மாவட்ட துணை தலைவர் இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இதில் குபேரா பெயிண்ட்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பெயிண்டிங் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

