ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப் பணிகள் – அமைச்சர் மூர்த்தி பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப் பணிகள் – அமைச்சர் மூர்த்தி பூமி பூஜை

மதுரை மேற்கு கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் மூர்த்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் தல்லாகுளம் சின்ன சுக்கிகுளம் அமைந்திருந்த அந்த அலுவலகம் தற்போது இடம் பற்றாக்குறையால் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

எனவே அந்த இடத்தில் புதிய அலுவலகம் கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூபாய் 590 கோடியிலும், மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் 590 கோடியிலும் என மொத்தம் 1,180 கோடி மதிப்பீட்டில் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக பூமி பூஜை அமைச்ச மூர்த்தி தலைமையில் நடந்தது.

இதில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் பிரிவின் குமார், எம்எல்ஏ வெங்கடேசன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை தமிழரசி, செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை இந்துமதி, உதவி இயக்குனர் அரவிந்தன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் கட்டப்படவுள்ளது.

தரைத்தளமானது வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒன்றிய குழு தலைவர் அலுவலகம் மன்ற கூட்ட அரங்கம் மற்றும் தேர்தல் பிரிவு கொண்டாடும் தளமாகவும், முதல் தளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் பொறியியல் பிரிவு மற்றும் கோப்பு பராமரிக்கப்படும் பிரிவு கொண்ட தளம் இரண்டாம் தளமானது காணொளி காட்சி கூட்டம் அரங்கம் கொண்டதாகும் அமைக்கப்பட்டுள்ளது.

பணிகளை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *