காஞ்சிபுரம்: இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் நல சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்

காஞ்சிபுரம்: இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் நல சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்

வாடிக்கையாளர்களின் திருப்தி நமது திருப்தியாக இருக்க வேண்டும் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் சமத்துவங்களில் மாநிலத் தலைவர் கண்ணன் வேண்டுகோள்.

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத்தரவுகள் நல சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆக்டர் குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி காலண்டரினை வெளியிட்டார்.

இதில் அவர் கூறும் போது, “வாடிக்கையாளர்கள் திருப்திப்படும் வகையில் செயல்பட வேண்டும்.

அனைத்து வியாபாரிகளும் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் தொழில் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளரின் மனநிறைவு நமக்கு முக்கியம் அதனை நிறைவு செய்யும் வகையில் செய்யும் போது நமது தொழில் மென்மேலும் வளர்ச்சி பெறும்” கூறினார்.

மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் உமேஷ், செயலாளர் பழனி, பொருளாளர் ஜெயராம், மாநில அமைப்பாளர் ராஜா,  அமைப்புச் செயலாளர் சைதை வடிவேல், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், கிரிபிரசாத், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் வரலட்சுமி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மோகனா, மாவட்ட துணைச் செயலாளர் அரவிந்த், மணிகண்டன் என்கின்ற அஜித், மாவட்ட செய்தி தொடர்பாளர் தீபா, செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சீனிவாசன், சுரேஷ், லோகேஷ், வெங்கடேசன், ஏழுமலை, சக்திவேல், ஜானகி, உஷா, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முன்னாள் நகரச் செயலாளர் சேகரன் பார்டர் பெருமாள், வழக்கறிஞர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆக்டர் குமார் சிறப்பாக செய்திருந்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *