காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஜி.வி. மதியழகன் பிறந்தநாள் விழா விமரிசை
காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஜி.வி. மதியழகன் பிறந்தநாள் விழா விமரிசை
காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் ஜி.வி. மதியழகன் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாட்டம்

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் திருவள்ளூர் மாவட்ட கிராம மறுசீரமைப்பு பொறுப்பாளருமான வழக்கறிஞர் ஜி.வி. மதியழகனின் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது.
மலர் மாலை அணிவித்து வாழ்த்து
ஐ.என்.டி.யு.சி. தலைவர் ராமநீராளன் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகரத் தலைவர் நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், திமுக மண்டலக் குழுத் தலைவர் செவிலிமேடு மோகன், முன்னாள் கவுன்சிலர் விநாயகம், யோகி, பிரபு, லோகநாதன், தென்னேரி சுகுமார், பவுல் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
பொன்னாடை அணிவித்து பாராட்டு
விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, வட்டார மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர், ஜி.வி. மதியழகனுக்கு மலர் மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களின் வாழ்த்துகளுடன் பிறந்தநாள் விழா உற்சாகமாக நடைபெற்றது.

