வழக்கறிஞர் ஜீவ மதியழகன் பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து
காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவரும் திருவள்ளூர் மாவட்ட கிராம சீரமைப்பு பொறுப்பாளருமான வழக்கறிஞர் ஜீவ மதியழகன் பிறந்தநாள் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து.

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் திருவள்ளூர் மாவட்ட கிராம மறு சீரமைப்பு பொறுப்பாளருமான வழக்கறிஞர் ஜி வீ மதியழகன் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஐ என் டி யு சி தலைவர் ராமநீராளன் தலைமையில் நடைபெற்ற இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகரத் தலைவர் நாதன், திமுக மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், முன்னாள் கவுன்சிலர் விநாயகம், யோகி, பிரபு, லோகநாதன், தென்னேரி சுகுமார், பவுல், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர, வட்டார, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.


