காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா

காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவி ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை தெருவில் அமைந்துள்ள சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழரின் திருநாளாம் பொங்கல் திருநாள் விமர்சையாக நடைபெற்றது. இதில் பட்டிமன்றம், பாட்டுப்போட்டி, நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் இட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் அனைவரின் கைத்தட்டலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு கடையிலிட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


