தூத்துக்குடி பிரஸ் கிளப் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

தூத்துக்குடி பிரஸ் கிளப் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம். 32 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிப்பு.
தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தின் முன்பு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
சங்க தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு செயலாளர் மோகன்ராஜ், பொருளாளா் ராஜு, இணைச்செயலாளர் சதீஷ்குமாா், துணைத்தலைவா் சிதம்பரம், கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன், ஆத்திமுத்து, ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து சங்க அலுவலகம் முன்பு பொங்கல் பானை வைத்து புத்தரிசியிட்டு கரும்புகளை கட்டி, அனைத்து வகையான காய்கறிகள் இறைவனுக்கு படைத்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து கௌரவ ஆலோசகா் அருண் சங்க உறுப்பினர்களுக்கு எவா்சில்வா் பொங்கல் பாணை , கரண்டி, மூடி மற்றும் 14 வகையான காய்கறி தொகுப்புகளுடன், பொங்கல் பண்டிகை உறுப்பினர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடும் வகையில் வேஷ்டி சட்டை, பொங்கல், கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொருட்களை அனைத்து உறுப்பினா்களுக்கும் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஓருவருக்கொருவா் கைகுலுக்கி மகிழ்ச்சியை தொிவித்துக்கொண்டனா்.

விழாவில் செயற்குழு உறுப்பினா்கள் லட்சுமணன், முத்துராமன், மாாிராஜா, இருதயராஜ், செந்தில்முருகன், கண்ணன், ராஜன், சட்ட ஆலோசகா் சரவணன், உறுப்பினா்கள் ஜாய்சன், கற்பகநாதன், பாலகுமாா், மாாிமுத்து, ரமேஷ், மணிகண்டன், அகமது ஜான், ரவிசந்திரன், அறிவழகன், முத்துக்குமாா், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

