காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி காவலர் அருண்குமார் தலைமையில் குடியரசு தின விழா விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஓரிகை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வந்தே மாதரம் பாடலை சிறப்பிக்கும் வகையில் குடியரசு தின விழா கல்வி காவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய தலைவர் இப்ராகிம், மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி, முன்னாள் மாவட்ட தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடைகளும் நினைவு பரிசைகளும் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாணவ மாணவிகளுக்கான குடியரசு தின பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர்.

இதில் பள்ளியின் செயலர் ரமேஷ் குமார், டைரக்டர் கிருஷ்ணா உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளியின் அலுவலக ஊழியர்கள், மாணவ மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *