காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் குடியரசு தின விழா: மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் குடியரசு தின விழா: மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அண்ணா லயன்ஸ் சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அண்ணா லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி சங்கத் தலைவர் லைன் கிருபாகரன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவிகள் முன்னிலையில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவிகளுக்கு கல்வி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
விழாவின் ஒரு பகுதியாக திருவள்ளுவர் குருகுலத்தில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், இனிப்புகள், எண்ணெய், சோப் மற்றும் வஸ்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
மாணவிகளின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் வகையிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூக சேவையில் லயன்ஸ் சங்கம்
குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மூலம் மாணவிகளுடன் தேசிய விழாவை கொண்டாடியதுடன், அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கி அண்ணா லயன்ஸ் சங்கத்தினர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், குருகுல நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குடியரசு தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதில்,
தலைவர்
PMJF.Lion.P. கிருபாகரன்,
பொருளாளர்
Lion.கு. உமாபதி,
PMJF.Lion.D. குமரேசன்,
MJF.Lion.R. பூபதி,
MJF.Lion.S. சுபாஷ் ராஜன்,
MJF.Lion.C. சுப்பிரமணி,
Lion.A. யுவராஜ்,
Lion.R.S. சேகர்,
Lion.S. ரவிச்சந்திரன்,
Lion.R. தணிகைவேல்,
Lion.V.R. உமாபதி,
Lion.G. கோதண்டன்,
Lion.P. கமலதாசன்,
Lion.P. பன்னீர் செல்வம்,
Lion.P. செந்தில்குமார்,
Lion.B. யுவராஜ்,
Lion.K. அமர்நாத்,
Lion.J. சிங்காரவேலன்
ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் “அண்ணா லயன்ஸ் சங்கம்” நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

