நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

கீழே கிடந்த தங்கத்தாலியை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாரதி என்பவரை பாராட்டுதல் தொடர்பாக 11.2.2026 ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒளி முகமது பேட்டையை சேர்ந்த பிரியா என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு வந்த பொழுது தனது தாலியை தவறவிட்டார்.
அப்பொழுது அதை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ரயில்வே ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த பாரதி, தகப்பனார் பெயர் ஆதி என்பவர் கீழே கண்டெடுத்து அதை மருத்துவமனையில் அயல் பணியாக பணிபுரியும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரிடம் ஒப்படைத்தார்.
மேற்படி தவறவிட்ட நகை குறித்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரி அவர்களையும் காணாமல் போன நகையை நேர்மையுடன் ஒப்படைத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ஊழியர் திரு பாரதி என்பவரையும் விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் திரு சங்கர சுப்பிரமணியன் பாராட்டி வெகுமதி அளித்தார்.

