வகுப்பறையே வங்கியாக மாறிய தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி

வகுப்பறையே வங்கியாக மாறிய தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையே வங்கியாக மாறியது: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாணவர்களிடையே வங்கிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பான வங்கிப் பணி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வங்கியில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் மற்றும் அதற்கான படிவங்களை பிழையின்றி நிரப்புவது குறித்து மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இந்த பயிற்சிக்காக ஒரு வகுப்பறை அப்படியே மாதிரி வங்கி போல மாற்றி அமைத்து அதற்கு சேவியர் வங்கி, மாணவர் மாதிரி வங்கி என்ற பெயர் வைத்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மேலாளர், காசாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் மாணவர்களே ஏற்று நடத்தினர். வங்கியின் அன்றாட அலுவல் பணிகளை மாணவர்கள் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.

நிஜ வங்கிச் சூழலை நேரில் கண்டது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த முன்னெடுப்பை ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாராட்டினர். இந்த சிறப்பான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் தலைமையாசிரியர் அமல்ராஜ் வழிகாட்டுதலில், ஆசிரியர் லூர்துசாமி செய்திருந்தார்.

   

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *