திருவிடைமருதூர் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பிரபாகரன் வேட்புமனு தாக்கல்

திருவிடைமருதூர் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பிரபாகரன் வேட்புமனு தாக்கல்

திருவிடைமருதூர் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பிரபாகரன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி (தனி) தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக பிரபாகரன் களமிறங்கியுள்ளார். இவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்டி, திருவிடைமருதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம், வெற்றிச் சின்னம் விசில் என தொண்டர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.

இந்த ஊர்வலத்தில், திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜு, மாவட்ட சட்ட ஆலோசகர் அணி ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது, திருவிடைமருதூர் பேரூர் செயலாளர் கோகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், செயற்குழு உறுப்பினர் RA பாண்டியராஜன் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் திருவிடைமருதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபாகரன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலருமான சந்திரகுமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *