திமுக ஆட்சியின் பெண்களுக்கான திட்டங்களை எடுத்துக் கூறி திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!
திமுக ஆட்சியின் பெண்களுக்கான திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராம கருமாணிக்கம் வாக்கு சேகரித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திருவாடானை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம கருமாணிக்கம் இன்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருவாடானை தொகுதி மக்களை அதிகாலையில் இருந்து சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
ராமநாதபுரம் நகர் பகுதியை அடுத்து உள்ள களத்தாவூர், கொட்டகை, மீனாட்சிபுரம், பெரிய கருப்ப நகர், முதுனாள், கவரங்குளம், பாப்பாகுடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அப்பகுதியில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்களிடம் திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம கருமாணிக்கம், முதல்வரின் பெண்களுக்கான திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரித்தார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா அடையாறு பாஸ்கரன் ஜோதி பாலன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

