மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா!
மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரையில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 123 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலைக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் நிலைக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களுக்கும் மதுரை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வேல்பாண்டியன் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேல்பாண்டியனின் மகன் விக்னேஷ், குருபிரசாத், முத்தரசு, கந்தவேல், வெங்கடேசன் உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

