ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு
பருவம் தவறி பெய்த மழை மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கபடாததை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் நெருஞ்சிபட்டி, தோப்படைபட்டி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, ஏனாதி, உள்ளிட்ட கிராமங்களில் 16,500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த மிளகாய் பருவம் தவறி பெய்த மழை மற்றும் தொடர்ச்சியாக பெய்த மழையால் முற்றுலுமாக பாதிக்கப்பட்டு மிளகாய் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் விவசாயிகள் பாதிக்கப்பட்ட ஓராண்டாகியும் ஏக்கருக்கு தலா ரூ.2500 தேசிய வேளாண் காப்பீட்டுத்தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை.

மேலும் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி செலவு செய்த பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு இதுவரை தமிழக அரசால் நிவாரணம் தொகை வழங்கப்படாததை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து மிளகாய் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை திரட்டி விரைவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கஞ்சி தொட்டி திறக்க போவதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க விவசாயிகள் தெரிவித்தனர்.

