கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு பொருள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் தனியார் இரும்பு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இன்று அதிகாலை தொழிற்சாலையில் அருகாமையில் உள்ள மின்மாற்றியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதாக கூறப்படும் நிலையில் அப்போது தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முனைப்புடன் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

