ஆடி அமாவாசை: திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.

மாதம் தோறும் வருகிற அமாவசை அன்று திதி கொடுக்க தவறியவர்கள். ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலங்களில் நீராடி தர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி, காசியை விட வீசம் அதிகம் எனக் கூறப்படும் புண்ணிய தலமான தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, கீரை, காய்கறிகள் ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து சூரிய பகவானை வழிப்பட்டு சென்றனர்.
இதனையொட்டி, திருவையாறு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

