தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை: முதல்வர் திறந்து வைத்து சிறப்புரை
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் முதல் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் துவக்கி வைத்து “நான் முதல்வன்” திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 209 பேருக்கு பணி ஆணை வழங்கினார்.

உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தத் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் மின்சார கார் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சாரக் கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து தொழிற்சாலை தயாரிக்கப்பட்ட காரை பார்வையிட்டார்.
பின்னர் மின்சார கார் மீது முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், டி ஆர் பி ராஜா, கனிமொழி கருணாநிதி எம்பி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 209 பேருக்கு பணி ஆணையை முதல்வர் வழங்கினார்.
பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் பேசும்போது,
“வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்விற்கு வின் பாஸ்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நான் இந்த நேரத்தில் மனதார வரவேற்கிறேன்.”
“தெற்காசியாவின் பெரிய இந்த தொழிற்சாலை தமிழகத்தை தேர்வு செய்தது பெருமையாக இருக்கிறது.”
“வியட்நாம்” என்றாலே வியப்புதான். அந்த வியட்நாம் நாட்டைச் சார்ந்த ‘வின் பாஸ்ட்’ அடிக்கல் நாட்டி 17 மாதத்தில் தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தை துவங்கி நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.”
“எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான போக்குவரத்தை முன்னெடுக்கும் நிறுவனமாக இருக்கக்கூடிய ‘வின்பாஸ்ட்’ தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு முதலமைச்சராக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு தமிழகத்தில் இருந்து தான் உற்பத்தியாக இருக்கிறது.”
“தமிழ்நாடு தான் இந்தியாவின் வாகன உற்பத்தியில் மற்றும் மின் வாகன உற்பத்தியின் தலைமை இடம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.”
“சென்னை தான் இந்தியாவின் தலைநகரம் திருப்பெரும்புதூரில் முதல் கார் உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் மின்வாகன உற்பத்தி ஆளை துவங்கப்பட்டிருக்கிறது.”
“இதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் இடையேயான வர்த்தக பொருளாதார வளர்ச்சி மேம்படும்.”
“கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலகம் எது வேட்டையாளர் மாநாட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட மற்றும் 3500 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற முறையில் இந்த உற்பத்தி திட்டத்தின் மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.”
“அடுத்த மாதம் ஜில்லா நகத்தில் இருக்கக்கூடிய தொழில்பேட்டையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது இன்று துவக்க விழா நடக்கிறது.”
“17 மாதத்தில் நிறுவனம் உற்பத்தியை துவங்கியிருக்கிறது. இதனால் தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய தொழில் பகுதியாக வளர்ச்சி அடையும் அதனால் உறுதியோடு சொல்கிறேன்.”
“இந்நாள் முதல் தமிழகத்தின் ஒரு பொன்னால்” என முதலமைச்சர் மேடையில் பேசினார்.
“இதுவரை இந்நிறுவனம் 1300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இந்த ஆளை தான் இந்தியாவிலேயே மின்சாரத்தால் தயாரிக்க கூடிய தொழிற்சாலை இங்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் பெண்களுக்கு ஏராளமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
என்னுடைய கனவு திட்டமான நான் முதல்வன் பிற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பற்றி இதை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட டிப்ளமோ மாணவர்கள் இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கிட்டதட்ட என்பது முதல் 90% பணியாளர்கள் தூத்துக்குடி மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து தான் இந்த நிறுவனம் பணியமர்த்தப் போகிறார்கள்.
உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பு இந்த திட்டம் திராவிட மாடலில் நிறைவேறி இருக்கிறது” என முதலமைச்சர் மேடையில் சூளுரைத்தார்.
“இதனால் பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகள் பேருக்கும் சென்னை காஞ்சிபுரம் கோவை ஓசூர் ஆகியவற்றை தொடர்ந்து வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழிற்கூடமாக தூத்துக்குடி உருவெடுத்து வருகிறது.
இப்படித்தான் ஒவ்வொரு மண்டலமாக பார்த்து பார்த்து வளர்த்து வருகிறோம் இந்தியாவினுடைய இரண்டாவது முழு மீன் வாகன உற்பத்தி திட்டங்கள் என்ற வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாட்டா நிறுவனத்தோடு மின்வாகன வாகனத்தை ராணிப்பேட்டையில் அடிக்கல் நாட்டினேன் இதே போல் மின்வாகன உற்பத்தியில் நடக்கிறது என உலகத்திற்கு உறுதிப்படுத்தி டாட்டா மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, உள்ளிட்ட இன்னும் பல பாரம்பரிய வாகனங்களும் மின்சார கார் உற்பத்தியை துவங்கியிருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் விண் குடும்பத்தினரை ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன் உங்களுடைய வின் குடும்பம் வாகன துறையில் மட்டுமல்லாமல் கல்வி மருத்துவம் தகவல் தொழில்நுட்பம் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் கோளெச்ச கூடிய குழுமம் உங்களுடைய வருங்கால முதலீடுகளை எல்லாம் தமிழ்நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தின் முதலமைச்சர் ஆக இந்த நேரத்தில் உங்களை கேட்டுக் கொள்வதாக வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை நிறுவனங்களிடம் மேடையில் கேட்டுக்கொண்டார்.
உங்கள் எல்லா முதலீடு திட்டங்களுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” என ஒரு மீண்டும் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக தனி விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து விரிவாக்க செய்யப்பட்ட விமான நிலையத்தை பார்வையிட்டார் பின்னர் அங்கிருந்து கார் மூலம் தொழிற்சாலைக்கு வருகை தந்த முதல்வருக்கு இருபுறமும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

