காஞ்சிபுரம்: அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காடு ஊராட்சியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு சத்துணவு சமையல் பாத்திரங்களை ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு சத்துணவு அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மழலை செல்வங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பரிசு பெட்டகம் பை மற்றும் குழந்தைகளுக்கு சமையல் செய்ய அனைத்து பாத்திரங்களும் மற்றும் அடுப்பு உள்பட அனைத்து உபகரணங்களையும் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் கம்பெனியினுடைய எம்டி அவர்களும் கம்பெனி உடைய ஹெச் ஆர் மற்றும் அதில் பணிபுரியும் அனைவரும் வருகை தந்து வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆசிரியர் பெருமக்கள் ஊராட்சி செயலர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு உபகரணங்களை கேட்டு பெற்றுக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுதலை தெரிவித்தனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

