காஞ்சிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் நரசிங்க ராயத் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு யாகசால பூஜை நடைபெற்ற மகாபூர்ணாவதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தீபாராதனைகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை நரசிங்கராக தெரு மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள தெருவாசிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

