தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற காளீஸ்வரி சுகுமார்: ராமநாதபுரத்தில் பாராட்டு விழா
 
					ராமநாதபுரம் முகவை முத்தமிழ் மன்ற சிறப்பு கூட்டம் ராமநாதபுரம் பாரதிநகர் கே.ஜே.கார்டனில் கவிஞர். மு.மானுடப்பிரியன் தலைமையில், தமிழரசி உதயக்குமார், செய்யது ஜாபர் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து நூல் திறனாய்வு, பா அரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற காளீஸ்வரி சுகுமார் அவர்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. இதில் முகவை முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


 
			 
			 
			 
			 
			