காஞ்சிபுரம் அண்ணா லயன் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானங்கள்
 
					காஞ்சிபுரம் அண்ணா லயன் சங்கம் சார்பில் சர்வ லக்ஷ்மி சில்க்ஸ் முன்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்கள் சங்கத் தலைவர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
 
 
காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் 2025-2026 ம் ஆண்டு சூரிய உதயம் முதல் சந்திரோதயம் வரை நலத்திட்ட உதவிகள் சேவை திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
 
இதில் மாவட்ட ஆளுநர் லைன் எம்டி பாஸ்கரன் லைன் காசி விஸ்வநாதன் ஆகியோர் வருகை புரிந்து சங்கத்தின் தலைவர் (சர்வலக்ஷ்மி சில்க்ஸ் சின்னகாஞ்சிபுரம்) அவர்களின் ஜவுளிக்கடை வாசலில் சிறப்பாக பல சேவைகள் செய்யப்பட்டது. இதில் சங்க தலைவர் கிருபாகரன் தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, துணி வகைகள், மரக்கன்றுகள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பெட்ஷீட், மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் நோட்டு புத்தகங்கள், பேக் ஆகியவை வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
 
 
இதில் சங்க செயலாளர் முரளிதரன், பொருளாளர் உமாபதி, முன்னாள் தலைவர் பூபதி, சேகர், தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அண்ணா லயன் சங்கம் சார்பில் லயன் குமரேசன் நன்றிகளை தெரிவித்தார்.


 
			 
			 
			 
			 
			