காஞ்சிபுரம் ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் வருஷாபிஷேக விழா

காஞ்சிபுரம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் வருஷாபிஷேக விழா சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் நிறுவனர் சஞ்சீவி ஜெயராம் சாலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் திருப்பதி நெடுஞ்சாலை அமைந்துள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்ற மகாபூர்ணாவதி தீபாராதனைகள் நெய்வேத்தியங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்ற விநாயகர் பெருமானுக்கும் மற்றும் நாக தேவதைகளுக்கும் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் மற்றும் சொர்ணாபிஷேகம் சேர்த்து கலசபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.


இதில் சோழன் கல்விக் குழும இயக்குநர்கள், மாணவிகள் ஆன்மிக ஆன்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிறுவனர் சஞ்சீவி ஜெயராம் சிறப்பாக செய்திருந்தார்.

