அண்ணா பிறந்தநாள் விழா: காஞ்சிபுரத்தில் OPS அணி சார்பில் மரியாதை

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா: அ. தி. மு. க. ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் அண்ணாவின் இல்லத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட சி. என். அண்ணாதுரை தெருவில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் அ.தி.மு. க. ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், ஆன்மீக அன்பருமான முத்தியால் பேட்டை ஆர்.வீ. ரஞ்சித்குமார் காலை 9.30 மணியளவில் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மிக பிராமாண்டமான மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.
பின்னர் அண்ணாவின் இல்லம் அருகே கூடிநின்ற பொது மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இனிப்பு வகைகள் வழங்கி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர் வி. ரஞ்சித்குமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கே. கோபால், ரமேஷ் மாவட்ட நிர்வாகிகள் எ. வஜ்ரவேலு, சரத்குமார், ஷகிலா, வேலு, ஷாலினி வேலு, ஒன்றிய செயலாளர் மாலிக் பாஷா, முனிரத்தினம், டபிள்யு. கே. சரவணன் வெங்கடேசன், மோகன், கோவிந்தராஜ், சூர்யா, காமாட்சி கான் பேரூராட்சி செயலாளர் குலசேகரன், படப்பை பாபு, ரவிக்குமார் மாவட்ட அணி செயலாளர். பூக்கடை ஜகா, ஜெயபிரகாஷ், சந்திரசேகர், பிரபு, மகேஷ், புண்ணியகோட்டி, விஜய், சீனிவாசன், சதீஷ், விமல், சக்திவேல் மற்றும் கட்சி தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

