அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி ராமநாதபுரம் பாஜகவினர் சிறப்பு வழிபாடு
 
					பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி ராமநாதபுரம் பாஜகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டி ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகேசன் தலைமையில், ஏராளமான பாஜகவினர் ஒன்று கூடி சிறப்பு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர்.

ஆலயத்திற்கு வந்த இஸ்லாமியர் ஒருவர் அண்ணாமலை, பாஜகவினர் நலமாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்தது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் தரணிமுருகேசன், “விரைவில் நலமுடன் மீண்டுவந்து தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளில் ஆளும் திமுக அரசுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் செயல்படவேண்டும், இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.


 
			 
			 
			 
			 
			