காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தேராபந்த் இளைஞர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தேராபந்த் இளைஞர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காஞ்சிபுரம் தேரா பந்த் இளைஞர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

கல்லூரி முதல்வர் கே ஆர் வெங்கடேசன் தலைமையில் துவக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இளைஞர் சங்க தலைவர் ஆனந்த் ஜெயின், செயலாளர இந்தர் ஜெயின், பொருளாளர் தருண் ஜெயின், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் ஜெயின், ராஜேஷ் குமார் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சேர்ந்த டாக்டர் பிரேம் குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்தனர்.

