காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நவராத்திரி: சிறப்பாக நடைபெற்ற கன்னியா பூஜை
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நவராத்திரி ஒட்டி சுகாசினி பூஜை கன்னியா பூஜை சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரமட வளாகத்தில் சங்கர மட பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சங்கரஜேந்திர சரஸ்வதி சபைகளின் பரிபூரண ஆசியுடன் நவராத்திரி ஒட்டி உலக மக்கள் நன்மை கருதியும், அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கிய வாழ்வு பெறவும், வேண்டி சுகாசினி பூஜை கன்னியா பூஜை உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் 108 சுமங்கலிகள் 108 கன்னிகா குழந்தைகள் ஆகியோருக்கு முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்து விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் சங்கர மடத்தின் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் நிர்வாகி கீர்த்தி வாசன், காமாட்சி அம்மன் ஆலய மணியக்காரர் சூரி, காமாட்சி அம்மன் ஆலய ஸ்தானிதர்கள் சுரேஷ் சாஸ்திரிகள், ஸ்ரீதர் சாஸ்திரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


