காஞ்சிபுரம் அண்ணா லயன் சங்கம் சார்பில் நூறாவது நாள் தொடர் சேவை திட்டம்
காஞ்சிபுரம் அண்ணா லயன் சங்கம் சார்பில் நூறாவது நாள் தொடர் சேவை திட்டம் சங்க தலைவர் லயன். கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் 2025-2026 ம் ஆண்டு 100 வது நாள் சேவை திட்டங்கள் சங்கத் தலைவர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
அந்த வகையில், 1 வது சேவையாக நமது சங்கத்தின் 100 வது நாள் சேவை தினத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக .Lion.Dr.Prof B.பூர்ணச்சந்திரன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். நமது சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் அவர்களால் காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் கோயில் வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நமது 2வது சேவையாக தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் வழங்கப்பட்டது.
3வது சேவையாக சங்கத்தின் சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் வழங்கப்பட்டது.
நமது 4 வது சேவையாக ஆண் ஒருவருக்கு வஸ்திரம் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.
நமது 5 வது சேவையாக ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டன.
நமது 6 வது சேவையாக அடர்வணத்தை பராமரிக்கப்பட்டது.

நமது 7 வது சேவையாக 1.நீரிழிவு நோய், 2.குழந்தைகளுக்கான புற்றுநோய், 3.கண் பாதுகாப்பு, 4. இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நமது 8 வது சேவை தினத்தில் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நமது 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த தலைவர் PMJF.Lion.P.கிருபாகரன், PMJF.Lion.D.குமரேசன், MJF.Lion.R.பூபதி, MJF.Lion.S.சுபாஷ்ராஜன், Lion.A.யுவராஜ், Lion.N.சுப்பிரமணியன், Lion.R.S.சேகர், Lion.V.R.உமாபதி, Lion.P.கமலதாசன், Lion.B.யுவராஜ், Lion.K.R.சங்கர், Lion.R.வரதன், Lion.R.தணிகைவேல், Lion.N.நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

