பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? | கனமழை எதிரொலி | School Leave?
 
					பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? | கனமழை எதிரொலி | School Leave?
சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலை முதலே மழை கொட்டி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்..
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தாலும் இதுவரை எந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.
கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
			 
			 
			 
			 
			