காஞ்சிபுரம் அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய கட்டடம்
 
					காஞ்சிபுரம் அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் அலுவலக கட்டிடத்தைச் சென்னை தலைமை செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் புதிய இணை ஆணையர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி எழிலரசன் அவர்கள், இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள், வணக்கத்திற்குரிய மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ் அவர்கள், மாங்காடு திருக்கோயிலின் துணை ஆணையர் திருமதி.சி.சித்ராதேவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.தியாகராஜன், ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் அறங்காவலர்கள் திரு.ஜெகன்னாதன், திரு.வரதன், மாநகர மன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திருக்கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
  
  
 


 
			 
			 
			 
			 
			