மே தின சிறப்பு கருத்தரங்கம்

மே தின சிறப்பு கருத்தரங்கம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் புதுச்சேரி மாநில குழு சார்பில் மே தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

மே 1 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் முத்தியால்பேட்டை தோழர் பேபி ஜான் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு உரையாற்றிய புதுச்சேரி காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் தோழர் பிரபுராஜ் அவர்களுக்கு புதுச்சேரி மாநில UTUC நிர்வாகிகள் கதர் ஆடை அணிவித்து கௌரவத்தினர்.

மேலும் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் தோழர் பாஸ்கர் முத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அகில இந்திய ஐக்கிய மாதர் சங்கம் புதுச்சேரி மாநில தலைவர் பூங்குழலி துணைத் தலைவர் மும்தாஜ் முன்னிலை வகித்தனர்.  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் தோழர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார்.

UTUC கட்டுமான தொழிலாளர் சங்கம் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை ஓர வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் ஆறுமுகம், நவீன், செந்தில், மணி, ஹெலன், அபிலா, மற்றும் பலர் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் செந்தில் நன்றி கூறி நிறைவு செய்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *