புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்!
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் புரட்சியாளர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 135வது பிறந்தநாளில் இரண்டு மையங்களில் நகரம் மற்றும் வில்லியனூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் முத்து, புதுச்சேரி மாநில குழு உறுப்பினர்கள் தோழர் ஆறுமுகம் (எ) இளையராஜா, தோழர் நவீன்குமார், தோழர் அன்புராஜ், தோழர் ஜெய்சிம்ராஜ், அகில இந்திய ஐக்கிய மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் பூங்குழலி, துணைத் தலைவர் தோழர் மும்தாஜ், மாநில குழு உறுப்பினர்கள் தோழர் ஹெலன், தோழர் மீனா, தோழர் கனிமொழி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

