மலச்சிக்கல் இன்றி நலமுடன் வாழ்வோம்!

மலச்சிக்கல் இன்றி நலமுடன் வாழ்வோம்!

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

உடல் ஆரோக்கியம் என்பதுதான் மற்ற எல்லா செல்வங்களையும் விட சிறந்தது. மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வத்தை அனுபவிக்கப்படும் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

இன்றைய சமுதாயத்தில் பிறந்த மழலை முதல், தள்ளாடும் முதியவர்கள் வரை பலரும் பல்வேறு விதமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

நோயின்றி வாழ எளிய முறைகள் என்ன?

நோய் ஏற்பட்ட பின் அதிலிருந்து விடுபடும் முறைகள் என்ன?

நோய் வரக் காரணங்கள் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்தது தான் நோய் வர முதன்மையான காரணமாகும்.

மாறிப்போன உணவுமுறை, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்களாக காணப்படுகின்றது.

இன்றைய வாழ்க்கை சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவு பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு மூலக்காரணமாகின்றன.

நோயின்றி வாழ எளிய வழிமுறைகள்

  • நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் தாராளமாக கிடைக்க கூடியவாறு இருத்தல் வேண்டும்.
  • நிற்கும்போதும், நடக்கும் போதும் நமது உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • உழைப்புக்கு ஏற்ற உணவை சாப்பிட வேண்டும் மற்றும் உணவை நன்றாக மென்று, மெதுவாக, அளவோடு சாப்பிட வேண்டும்.
  • கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டாம்.
  • கோபம், உணர்ச்சிவசப்படுதல், கவலை இவைகளைத் தவிர்த்து தியானங்களில் ஈடுபட்டு மனதை அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.
  • உடற்பயிற்சி உயிர் காக்கும். எனவே தினமும் 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடலாகும். அதனை நோயின்றி காப்பது எம்முடைய முதல் கடமையாகும். சுவரை வைத்து சித்திரம் வரைய வேண்டும் நமது உடலை வைத்துத்தான் உயிரை பேண முடியும்.

உடலை பேணுவோம் உயிரை காப்போம்!

இன்றைய நாளில் மலச்சிக்கல் வராமல் தடுப்பது எப்படி?

மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழித்தால் எவ்வித உடல் உபாதைகளும் வராமல் இருக்கலாம். அப்படி மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய முறைகளை கையாண்டால் மலச்சிக்கலே வராது.

மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய முறைகள்

  • தினமும் இரவு படுக்கும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
  • தினமும் ஒரு ஆரஞ்சு பழம் உரித்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
  • உலர்ந்த திராட்சை ஆறு எடுத்து நன்கு மென்று தின்றால் போதும்.
  • ஏதாவது ஒரு வகை கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் இரவில் மூன்று பேரீச்சம் பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வரலாம்.
  • கொய்யாப்பழத்தை விதையுடன் ஒன்றை சாப்பிடலாம்.
  • பப்பாளிப்பழம், அத்திப்பழம் இவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.
  • எலுமிச்சை சாற்றை வெந்நீரில் கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து வரலாம்.
  • காலையில் பல் தேய்த்ததும் இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் இருக்காது.

எளிய முறைகளை கடைபிடிப்போம்!

மலச்சிக்கல் இன்றி நலமுடன் வாழ்வோம்!!

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *