காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அவசர ரத்த தான சேவையில் முதல் பரிசு!
ஈரோட்டில் நடைப்பெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில அளவில் ரத்ததானம் வழங்கியதில் முதலிடம் பிடித்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கேடயம் வழங்கி ஊக்குவிப்பு
“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” மார்க்க பிரச்சார பணிகளையும், மனித நேயம் காக்கும் சமுதாய பணிகளையும் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது.
மனிதநேயப் பணிகளில் மணிமகுடமாக திகழும் பணி உயிர்காக்கும் இரத்ததான சேவை ஆகும். இந்த ஜமாஅத் துவங்கப்பட்டது முதல் தமிழகத்தில் இரத்ததானம் வழங்குவதில் இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக தமிழக அரசின் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பணி ஜமாஅத்தின் சார்பாக பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவசர ரத்த தான சேவையில் முதலாம் பரிசு, 25.01.2026 (ஞாயிறு) ஈரோட்டில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட தலைவர் அக்ரம் பேசும்போது, “இதுபோன்ற அங்கீகாரங்கள் நமக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு அங்கமே என்றாலும், இறைவனிடம் மட்டுமே கூலி எதிர்பார்த்தவர்களாக தொடர்ச்சியாக இப்பணிகளை செய்து வருகின்றோம்.”
“இதற்காக களப்பணிகள் செய்கின்ற ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிளைகளின் நிர்வாகத்திற்கும், தாயிக்களுக்கும், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எந்நேரமாயினும் ஓடோடி வந்து தொடர்ச்சியாக இரத்ததானம் செய்யும் இரத்தக் கொடையாளர்கள்” ஆகிய அனைவருக்கும் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காஞ்சிபுரம் மாவட்டம்’ சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று கூறினார்
மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் இ.முஹம்மது அவர்கள் கேடயம் வழங்க மாவட்ட தலைவர் அக்ரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் மருத்துவரணி செயலாளர் சர்புதீன், செயலாளர் அஷ்ரஃப், பொருளாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

