காஞ்சிபுரம் அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் ஆலயத்தில் ஆன்மீக நூல் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம் அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் ஆலயத்தில் ஆன்மீக நூல் வெளியீட்டு விழா கயிலை மணி சுந்தரேசன் ஓதுவார் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரு மேட்ரலீஸ்வரர் ஆலயத்தில் திருவைகுண்ட காலத்திய அப்பர் பிரபந்தமாலை ஆன்மீக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தேவார இசைமணி தமிழ்ச்செல்வன் ஓதுவார் இறை வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சிவப்பிரகாச ஸ்ரீ வீரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். இதில் புலவர் சரவண சதாசிவம், கயிலை மணி, வஜ்ரவேலு ஆகியோர் நூல் அறிமுக உரை ஆற்றினார்கள். நூலினை தொகுத்த கயிலை மணி சுந்தரேச ஓதுவார் நூலினை வெளியிட சிவப்பிரகாச ஸ்ரீ வீரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் நூலினை பெற்றுக் கொண்டார்.

இந்த நூலினை கும்பகோணத்தைச் சேர்ந்த ஞான குழந்தை சிவக்கன்று ஸ்ரீ கருணா அமுதசுவாமி எழுதி விளக்க உரை ஆற்றினார். இதில் மருத்துவர் தரணிதரன், சைவத்திரு ராம்நாத், சைவத்திரு பார்த்தசாரதி, சைவத்திரு, நந்தி செல்லதுரை, கைது மணி, ஜோதி லிங்கம், சிவத்திரு தனபால், தேவார இசைமணி லோகநாதன், தேவார இசைமணி நமச்சிவாயம் ஆகியோர் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
இதில் ஏராளமான பொதுமக்களும் சிவ தொண்டர்களும் ஆன்மீக ஆன்றோர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஆன்மீக நூல் மற்றும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

