காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி திரு விளக்கு பூஜை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.

காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் தைப்பூசத்தினை ஒட்டி திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குங்குமரச் சென்னை மற்றும் பக்தி பாடல்கள் பாடி தீபாராதனைகள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் அன்னப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


