காஞ்சிபுரத்தில் “ரமீஸ் கல்கத்தா ஸ்டோர்” பிரம்மாண்ட திறப்பு – பரிசுப் பொருட்கள் மொத்த விலையில் விற்பனை

காஞ்சிபுரத்தில் “ரமீஸ் கல்கத்தா ஸ்டோர்” பிரம்மாண்ட திறப்பு – பரிசுப் பொருட்கள் மொத்த விலையில் விற்பனை
  • காஞ்சிபுரத்தில் “ரமீஸ் கல்கத்தா ஸ்டோர்” பிரம்மாண்ட திறப்பு – பரிசுப் பொருட்கள் மொத்த விலையில் விற்பனை!
  • சென்னை செல்லாமல் காஞ்சிபுரத்திலேயே குறைந்த விலையில் அனைத்து பரிசுப் பொருட்களும் கிடைக்கும் என உரிமையாளர் தகவல்!!

காஞ்சிபுரம் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த பரிசுப் பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும் வகையில் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.

ரமீஸ் கல்கத்தா ஸ்டோர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மொத்த விலை பரிசுப் பொருட்கள் கடை, காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகே கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் திறக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவிற்கு என்.எஸ். நவீன் குமார் தலைமை வகித்தார். கடையில் அனைத்து வகையான பரிசுப் பொருட்கள், கிப்ட் ஐட்டங்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உரிமையாளர் என்.எஸ். நவீன் குமார் கூறுகையில், “பரிசுப் பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் வாங்க சென்னை செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. காஞ்சிபுரத்திலேயே மிகக் குறைந்த விலையில் அனைத்தும் கிடைக்கும்” என்றார்.

இந்த திறப்பு விழாவில் தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *