மதுரையில் மே 12-ல் ரஷ்ய கல்விக் கண்காட்சி – இந்திய மாணவர்களுக்கு 10,000 MBBS இடங்கள்

மதுரையில் மே 12-ல் ரஷ்ய கல்விக் கண்காட்சி – இந்திய மாணவர்களுக்கு 10,000 MBBS இடங்கள்
  • மதுரையில் மே 12-ல் ரஷ்ய கல்விக் கண்காட்சி – இந்திய மாணவர்களுக்கு 10,000 MBBS இடங்கள்!
  • ரூ.3.5 லட்சம் முதல் மருத்துவக் கல்வி; 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகை!!

2026-27 கல்வியாண்டிற்கான அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி வரும் மே 12ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. ஹோட்டல் ராயல் கோர்ட் இல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஏழு முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்கின்றன.

இந்தக் கண்காட்சியில் இந்திய மாணவர்களுக்காக 10,000 MBBS இடங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.

ரஷ்யாவில் MBBS படிப்புகளை ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் என்ற குறைந்த கட்டணத்தில் பயில முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளிநாட்டு மருத்துவக் கல்விக்காக வகுத்துள்ள சமீபத்திய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் நாடாக ரஷ்யா இருப்பதால், ஆண்டுதோறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

NEET தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் முக்கியப் பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் MBBS படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். IELTS, CET போன்ற தேர்வுகள் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் மருத்துவப் படிப்புகளுடன் Bio-Technology, Artificial Intelligence, Data Science போன்ற நவீன தொழில்நுட்ப துறைகளுக்கான படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பங்கேற்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில்:

Volgograd State Medical University
Kazan State Medical University
Moscow Aviation Institute
Pirogov Russian National Research Medical University உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

இக்கண்காட்சி சென்னை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூரிலும் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள் 9282 221 221 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *