தூத்துக்குடி : மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி : மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்; ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் நுழைவாயில் முன்பு சி ஐ டி யு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய பாரதிய ஜனதா அரசு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பு சட்டங்களாக மாற்றி அமல் படுத்தி உள்ளது.

இந்த சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமையை பாதிக்கிறது என்று கூறி நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த நான்கு தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் துறைமுகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்க கூடாது விவசாயிகளை பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதை தொடர்ந்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுக நுழைவாயில் முன்பு சி ஐ டி யு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சார்பில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் துறைமுகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது விவசாயிகளை பாதிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் R.ரசல், துறைமுக ஊழியர் சங்கச் செயலர் செயலாளர் A.காசி, துணைச் செயலாளர் ஆனந்த் முருகன், அப்பாஸ், ராமர், மணிகண்டன், தினேஷ், நாகராஜன், கார்த்தி, ரகு, ஜெய்லானி மற்றும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *